ரமலான் பண்டிகை : நோன்பு கஞ்சிக்காக 6,500 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதலமைச்சர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்கப்பட்டு வருகிறது. 

கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. 

இந்தாண்டு ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

 தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்குவதற்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 

மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு 6,500 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படும். இதனால், அரசுக்கு கூடுதலாக 25 கோடியே 63 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief minister stalin order 6500mt rice provide to mosque


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->