விருதுநகர்.! பிளாஸ்டிக் கவர் விழுங்கிய 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கவர் விழுங்கிய 7 மாத ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி துரைசாமிபுரம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த கார்த்தீஸ்வரன் என்பவருடைய 7 மாத ஆண் குழந்தை கலைக்கதிர்.

இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது கீழே கிடந்த பிளாஸ்டிக் கவர் துண்டு பேப்பரை எடுத்து குழந்தை கலைக்கதிர் விழுங்கி உள்ளான்.

இதையடுத்து சிறிது நேரத்தில் குழந்தையும் மயங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இங்கும் சிகிச்சை பலனளிக்கவில்லை என்பதால் மதுரை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்ட கலைக்கதிர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளான்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Child dies after swallowing plastic wrap in virudhunagar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->