சேலம் : 13 சிறுமிக்கு குழந்தை திருமணம்.. 5 பேர் வழக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


13 வயது சிறுமிக்கு திருமணம் நடத்த முயன்ற பெற்றோர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் செங்கனூர் பகுதியில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த நிலையில் 13 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற இருப்பதாக மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து ரஞ்சிதா தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் 13 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற இருந்தது உறுதியானது.

அதைத்தொடர்ந்து போலீசார் அந்த திருமணத்தை உடனடியாக தடுத்து நிறுத்தினர். மேலும் மணமகன் மற்றும் சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Child marriage in Salem case filed against 5 persons


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->