தமிழகத்திற்கு இப்படி ஒரு நிலையா? 55.6 % அதிகரித்த குழந்தை திருமணங்கள் - பெரும் அதிர்ச்சி ரிப்போர்ட்!
Child Marriage Tamilnadu Shocking report
தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டில் குழந்தை திருமணங்கள் 55.6 சதவிகிதம் அதிகரித்து உள்ளதாக [இல்லை விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 2023ல் 1,054 குழந்தை திருமணங்கள் நிகழ்ந்த நிலையில், நடப்பு 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை 1,640 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் அதிர்ச்சியாக அதிகாரிகள் புகாரின் அடிப்படையில் திருமணங்களை தடுத்து நிறுத்தும் சதவிகிதம் குறைந்து வருவது கவலைக்குறியாகும். 2022ல் 3,609 புகார்கள் கிடைத்ததில் 70.2 சதவிகித திருமணங்கள் தடுக்கப்பட்டன.
2023ல் இது 65.4 சதவிகிதமாகவும், 2024ல் 53.7 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. புகார்களை பெறுவதில் தாமதம் இதற்குக் காரணமாகும்.
ஈரோடு மாவட்டம் 150 குழந்தை திருமணங்களுடன் முதலிடம் பிடித்துள்ளது. நெல்லை 133, கோவை 90, நாமக்கல் 74, திருப்பூர் 66, தருமபுரி 58, சேலம் 51 ஆகியவை அதிக குழந்தை திருமணங்கள் நடைபெற்ற மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளன.
பள்ளிக் கல்வியை நிறுத்தும் சமூக அழுத்தங்கள், பொருளாதார சிக்கல்கள், விழிப்புணர்வு குறைவு ஆகியவை குழந்தை திருமணங்களின் முக்கிய காரணமாக ஆர்வலர்கள் கண்டறிகின்றனர்.
தமிழக அரசு புதுமைப் பெண் திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், குழந்தை திருமணங்கள் அதிகரிப்பது சமூக நலத்திற்கான பெரும் சவாலாகவே உள்ளதாக சமூக ஆர்வலர்கள் மனம் குமுறுகின்றனர்.
English Summary
Child Marriage Tamilnadu Shocking report