சித்ரா பவுர்ணமி கிரிவலம்.. திருவண்ணாமலையில் விஐபி தரிசனம் ரத்து!
Chitra Pournami Girivalam VIP darshan cancelled in Tiruvannamalai
சித்ரா பவுர்ணமி தினத்தன்று அண்ணாமலையார் கோவிலில் இந்த ஆண்டும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக சித்திரை மாதம் வரும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பக்தர்களால் கருதப்படுகிறது. அந்த வகையில், திருவண்ணாமலையில் அடுத்த மாதம் 11-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.01 மணி முதல் மறுநாள் இரவு 10.25 மணி வரை சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடைபெறவுள்ளது.
அன்றய தினம் வழக்கத்தைவிட பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால்,பல்வேறு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
மேலும் அன்று பக்தர்களின் வசதிக்காக , 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.அதுமட்டுமல்லாமல் கோவில் மற்றும் கிரிவலப் பாதை பகுதியில் பக்தர்களுக்குத் தேவையான இடங்களில் போதுமான கழிவறைகளும், குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது .
இந்தநிலையில் அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் என்றும், தரமான உணவுகள் வழங்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சித்ரா பவுர்ணமி தினத்தன்று அண்ணாமலையார் கோவிலில் இந்த ஆண்டும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும்
கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
English Summary
Chitra Pournami Girivalam VIP darshan cancelled in Tiruvannamalai