சோழர் காலத்து சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு!
Chola era idols found in America museum
திருவாரூர் மாவட்டத்திலுள்ள வேணுகோபால சுவாமி கோயில் சொந்தமான சோழர் காலத்து விஷ்ணு மற்றும் நடனமாடும் கிருஷ்ணர் சிலைகள் ஆலத்தூரில் உள்ள விஸ்வநாத ஸ்வாமி கோயிலில் வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலைகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போனதை அடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. மாவட்டச் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணைத்து வந்த நிலையில் மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதனை அடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீசார் இந்த சிலை தொடர்பான படங்கள் புதுச்சேரியில் இருப்பது தெரியவந்தது. தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் புதுச்சேரியில் மேற்கொண்ட விசாரணையில் விஷ்ணு மற்றும் நடனமாடும் கிருஷ்ணர் சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அமெரிக்காவில் இருக்கும் தன்னார்வலர்கள் மூலம் விசாரணை மேற்கொண்டதில் சிலைகள் இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தலைமையிலான போலீசார் விஷ்ணு மற்றும் நடனமாடும் கிருஷ்ணர் சிலைகள் தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டதற்கான ஆவணங்களை திரட்டி வருகின்றனர். அமெரிக்காவில் இருக்கும் இந்த சிலைகள் மீட்கும் முயற்சியில் தமிழக போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
English Summary
Chola era idols found in America museum