ராமநாதபுரத்தில் கொடூரம்.. கிறிஸ்தவ தேவாலயத்தில் 3 சிறுமிகளிடம் அத்துமீறிய மதபோதகர்.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் உள்ள புனித அருளானந்தர் தேவாலயத்தில் பங்குத்தந்தையாக (பாதிரியார்) இருப்பவர் ஜான்ராபர்ட்(46). கடந்த ஞாயிற்று கிழமை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இந்த நிலையில்  பிரார்த்தனை நிறைவடைந்து, அனைவரும் தேவாலயத்தைவிட்டு புறப்பட்ட நிலையில், 3 சிறுமிகளை மட்டும் ஜான்ராபர்ட் தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் சிறுமிகளிடம், பாலியல் உணர்வுகளைத் தூண்டும்விதமான ஆபாசவார்த்தைகளால் பேசிக்கொண்டே பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவரிடமிருந்து தப்பி வந்த 3 சிறுமிகளும் தங்களின் பெற்றோர்களிடம் நடந்த விவரத்தைக் கூறி அழுதுள்ளனர். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர், உடனடியாக ராமநாதபுரம் குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகளைத் தொடர்புகொண்டு புகார் அளித்தனர்.

இதனையடுத்து குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ், சிறுமிகள் 3 பேரிடமும் தனித் தனியாக விசாரணை நடத்தினார். இதன் பேரில் பாதிரியார் கைது செய்யப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Church father sexual Harrasment for 3girls


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->