பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.வி ரமணன் காலமானார்.! - Seithipunal
Seithipunal


பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், வானொலி விளம்பரங்களில் பிரபலமாக குரல் கொடுத்தவருமான எஸ்.வி.ரமணன் வயது முதிர்வின் காரணமாக இன்று அதிகாலை  இயற்கை எய்தினார். இந்நிலையில், அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும். 

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே சுப்ரமணியத்தின் மகனான ரமணன் நாடக கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கி பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். ரமணனுக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்

ஆவணப்படத் தயாரிப்பாளராகவும் இருந்த இவர் தூர்தர்ஷனுக்காக பல தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார். அகில இந்திய வானொலியில் அவரது பாரிடோன் குரலில் பதிவான விளம்பரங்கள் இன்றும் பிரபலமாக உள்ளன. ஆன்மீகம் முதல் கலை மற்றும் கட்டிடக்கலை என தேசியவாதம் வரை, அவரது ஆவணப்படங்கள் பரவலாக பாராட்டப்படுகின்றன. 

இவரது சகோதரியான டாக்டர் பத்மா சுப்ரமணியம்  பிரபலமான பரத நாட்டிய நடனக் கலைஞர் ஆவார். இதுமட்டுமல்லாமல், ஒரு ஆராய்ச்சி அறிஞர், நடன இயக்குனர், ஆசிரியர், இந்தியவியலாளர் மற்றும் எழுத்தாளர் என பல்வேறு துறைகளிலும் புகழ் பெற்றுள்ளார். 

ரமணனின் சகோதரர்களான அபஸ்வரம் ராம்ஜி ஒரு இசைக்கலைஞர் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு புகழ்பெற்ற ஆவணப்பட தயாரிப்பாளர் ஆவார். மேலும், இளம் இசையமைப்பாளரான அனிருத் ரமணனின் பேரன்.

இவரின் ஆவணப்படம் ஒன்றிற்கு  நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுத்துள்ளார். பல புகழைப்பெற்ற ரமணன் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் விளம்பர உலக பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ciniema director sv ramanan rest in piece


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->