திரைப்படத்துறையின் எழுத்தாளரான தூரிகையின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த சீமான்..! - Seithipunal
Seithipunal


பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞர் கபிலனின் மகளுமான தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூரிகை முன்னனி ஆங்கில ஊடகத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

மேலும் தூரிகை, "பீயிங் வுமன்" என்னும் இணைய இதழையும் தொடங்கி, நடத்தி வந்தார்.  தூரிகை, பல்வேறு திரைப்படங்களில் எழுத்தாளராக மட்டுமில்லாமல், ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவரின் தற்கொலை சினிமா மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கவிஞர் கபிலனின் மகள் தூரிகை மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டரில், புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான அன்புத்தம்பி கபிலன் அவர்களின் மகள் தூரிகை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனத்துயரமும் அடைந்தேன். 

தன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் தம்பியை ஆற்றுப்படுத்தவும் தேற்றவும் சொற்களின்றி கலங்கித்தவிக்கிறேன். கொடுந்துயரில் சிக்கிக்கொண்டிருக்கும் தம்பி கபிலனுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் ஆறுதலைத்தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். என்று சீமான் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cinima industry writer thoorikai death seeman condolence


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->