இன்றுடன் நிறைவடையும் மகா கும்பமேளா; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கிய மஹா கும்பமேளா இன்று (பிப்ரவரி 26) நிறைவு பெறுகிறது. இதுவரை இந்த கும்பமேளாவில் 63 கோடிக்கும் அதிகமானோர் கலந்து கொண்டுபுனித நீராடி உள்ளனர்.

இன்று நிறைவு நாளையொட்டி முன் எப்போதும் இல்லாத வகையில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருவதோடு, பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று மகா சிவராத்திரி விழாவையொட்டி பிரயாக்ராஜ் முழுவதும் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அத்தியாவசிய தேவைகளுக்காக மருத்துவர்கள், காவலர்கள், நிர்வாக அதிகாரிகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இயங்கலாம் என்றும் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

மேலும், பிரயாக்ராஜ் பகுதியில் எந்த இடத்தில் மக்கள் வருகின்றனரோ, அதன் அருகிலேயே நீராட வேண்டும் என்று கட்டுப்பாடுகளை போலீசார் விதித்து உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maha Kumbh Mela to conclude today


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->