30 ஆண்டுகளில் 300 குழந்தைகள்; ஈவு இரக்கமின்றி சீரழித்த டாக்டர்..!
Doctor abused 300 children in France over 30 years
கடந்த 30 ஆண்டுகளாக 300 குழந்தைகளை பாலியல் ரீதியாக கொடுமை படுத்தியதாக டாக்டர் ஒருவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். ஐரோப்பிய நாடான பிரான்சைச் சேர்ந்த ஜோயல் லீ ஸ்கோரனெக், 74. டாக்டர், கடந்த 2017-இல் இவரது அண்டை வீட்டைச் சேர்ந்த சிறுமி ஒருவர், டாக்டர் ஸ்கோரனெக் தன்னை தகாத இடத்தில் தொட்டதாக போலீசில் புகாரளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதோடு, அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். அப்போதுதான் பொய்ப்பிசாருக்கு திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அவரது வீட்டில், மூன்று லட்சம் ஆபாச போட்டோக்கள், 650 வீடியோக்கள், குறிப்புகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் என போலீசார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, குறித்த டாக்டர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதிலும் நான்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு 2020-இல் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன், அவரால் பாதிக்கப்பட்டவர்களில் பலர், தற்கொலைக்கு துாண்டப்பட்டதோடு, மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகினர். சிலர் திருமண வாழ்க்கையில் சிக்கல்களை அனுபவித்ததாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், அவர் மீது மேலும் பல குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான வழக்குகள் நடந்து வருகின்றன. வழக்கில் ஆஜராவதற்காக அழைத்து வரப்பட்ட அவர், கடந்த 30 ஆண்டுகளாக 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்த அந்த டாக்டர் நீதிமன்றத்தில் நேற்று கூறுகையில், “நான் குழந்தைகளுக்கு எதிராக அருவருக்கத்தக்க செயல்களைச் செய்துள்ளேன். அந்த பாதிப்புகள் சரிசெய்ய முடியாதவை என்பதை அறிவேன். என் செயல்களுக்குப் பொறுப்பேற்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
English Summary
Doctor abused 300 children in France over 30 years