அதிமுக முன்னாள் அமைச்சர் கலந்துகொண்ட கூட்டத்தில் கைகலப்பு.! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் கலந்துகொண்ட கூட்டத்தில் கைகலப்பு.!

திருப்பூர் மாநகர் மாவட்டம் அதிமுகவின் சார்பில் குமார் நகரில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் மாநகர மாவட்டச் செயலாளர் மற்றும் அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் முடிவில் மாநகர் மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை அந்தந்த வார்டு செயலாளர்களிடம் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிமுக நிர்வாகிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

சிறிது நேரத்தில் இந்தத் தள்ளுமுள்ளு கைகலப்பாக மாறியதை அடுத்து சமரசம் பேசச் சென்ற முன்னாள் அமைச்சரும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எம் ஆனந்தனைப் பழனிச்சாமி தாக்க முயன்றார். இதைப்பார்த்த மற்ற உறுப்பினர்கள் இருவரையும் தடுத்து பழனிச்சாமியை  வெளியே அழைத்துச் சென்றனர்.

இதனால் மாநகர மாவட்டச் செயலாளர் மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். இதைத் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கையானது பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ விஜயகுமார், பல்லடம் தொகுதி எம்எல்ஏ எம் எஸ் ஆனந்தன்,  முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

clash in tirupur admk meetting former minister ran away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->