10ம் வகுப்பு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்.? தமிழக அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுவதும் 2022-2023 கல்வியாண்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10 வகுப்பு பயின்ற அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதில் மாற்று திறனாளி மாணவர்கள் 13,151 பேரும், சிறையில் இருந்து தேர்வு எழுதியவர்கள் 264 பேரும் அடங்குவர்.

இந்த பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே19ம் தேதி அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்களின் நகல் மதிப்பெண் சான்றிதழை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொண்டனர். அதனை வைத்து பதினோராம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்ந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. 

இந்த நிலையில் மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 18.08.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10:00 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும். தனித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Class 10th students can get their original marks sheet from Aug18


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->