மூடப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. கவுன்சிலிங் மூலம் மீண்டும் வேலை.. டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.!!
Closed TASMAC employees work allocate through counseling
தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் 5,329 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்படும் நிலையில் அதில் தகுதியான 500 கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சராக செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். ஆனால் அதற்கான எந்த ஒரு நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளாத நிலையில் எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தன.
இந்த நிலையில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கடந்த மாதம் முதல் பகுதி மற்றும் மண்டல மாரியாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஆய்வு செய்யப்பட்டு மூடப்பட வேண்டிய கடைகளின் பட்டியல் தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜூன் 22 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.
இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து கடந்த ஜூன் 22ம் தேதி டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் அனைத்து டாஸ்மாக் மண்டல மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரிய ஊழியர்களுக்கான மாற்றுப்பணி குறித்தான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் காலிப் பணியிடங்கள் உள்ள டாஸ்மாக் கடைகளில் வேலை வழங்கப்படும் எனவும் வெளிப்படைத்தன்மையுடன் கவுன்சிலிங் நடத்தி பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் "அனைத்து மூத்த மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் மூடப்பட்ட கடைகளின் பணியாளர்களை பணியமர்த்துவது தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நிர்வாக அடிப்படையில் கடை பணியாளர்கள் பின்வரும் அறிவுறுத்தல்களின்படி பணியமர்த்தப்பட வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் உள்ள கடை ஊழியர்களின் மாவட்ட முதுநிலை, மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் செய்ய மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் பின்பற்றப்பட வேண்டும்.
இதுதொடர்பாக, 1. உதவி விற்பனையாளர்கள், 2. விற்பனையாளர்கள் மற்றும் 3. மேற்பார்வையாளர் உள்ள கடை ஊழியர்களின் பணி மூப்புப் பட்டியல் மாவட்ட மேலாளர், முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகங்கள் மற்றும் டிப்போக்களில் உள்ள முக்கிய இடங்களில் அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட வேண்டும். மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் வேலை அளிக்கப்படும்" என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Closed TASMAC employees work allocate through counseling