பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவருக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


விருதுநகர், பனையடிப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் சண்முகராஜ் (வயது 36) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த தமிழகம் முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், விருதுநகர் மாவட்டம் பனையடிப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சண்முகராஜ் (வயது 36) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டதும் மிகுந்த வேதனை அடைந்தேன். 

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும் அவரது குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டு உள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM announces financial person died in firecracker factory explosion


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->