உயர்கல்வி வரை அனைத்து கல்விச் செலவையும் அரசே ஏற்கும் - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இன்று விருதுநகரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின், விருதுநகர் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, 

தெற்கு ஆற்றில் புதிய அணை கட்டப்படும் ,
அருப்புக்கோட்டை அருகே 350 கோடி ரூபாயில் புதிய சிப்காட் அமைக்கப்படும், 
கௌசிகா ஆறு, கஞ்சம்பட்டி கண்மாய் சீரமைக்கப்படும், 
சிவகாசியில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநாட்டு கூட்டரங்கம் அமைக்கப்படும், 
விருதுநகரில் 25 கோடி ரூபாய் செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

மேலும், "பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான அனைத்து கல்விச் செலவையும் அரசே ஏற்கும்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் கீழ் இதற்கு தனி நிதியம் உருவாக்கப்படும். முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு ரூ.5 கோடி அரசு வழங்கும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MK Stalin announce Virudhunagar fire crackers workers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->