கட்டில், மெத்தை, 4 கிராம் தங்க தாலி! முதலமைச்சர் முக ஸ்டாலின் நடத்திவைத்த 31 கல்யாணம்! - Seithipunal
Seithipunal


சென்னை திருவான்மியூரில் இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்துள்ளார்.

திருவான்மியூர் பகுதியில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் இன்று 31 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பாக திருமணம் நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பாக மணமகளுக்கு 4 கிராம் தங்கம் தாலி வழங்கப்பட்டது.

மேலும், இந்து சமய அறநிலையத் துறை சார்பாக கட்டில், மெத்தை, பீரோ, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ரூ.60,000 மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் ஒவ்வொரு ஜோடிக்கும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் பேசியதாவது,முதலமைச்சராக அறநிலையத்துறை நிகழ்ச்சியில் தான் அதிகமாக நான் கலந்து கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MK Stalin Chennai HRCE Marriage


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->