முரசொலி செல்வத்தின் உடலைக் கண்டு கதறி அழுத மு.க ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் உடல்நலக் குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

திமுகவின் நாளேடான முரசொலியின் நிர்வாக ஆசிரியராக முரசொலி செல்வம் இருந்தார். முரசொலியில் சிலந்தி எனும் பகுதியை எழுதி வந்தவர் இவரே. அவரது மறைவுக்கு அரசியல்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரது உடல் பெங்களூரில் இருந்து நேற்று பிற்பகல் சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. முரசொலி செல்வத்தின் உடலைக் கண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு கதறி அழுதார். 

இதைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக உறுப்பினர்கள் முரசொலி செல்வத்தின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm mk stalin cry murasoli maran body


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->