புயல் பாதிப்பு: நிவாரணம் வழங்க உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்!
CM Mk Stalin order for Cyclone relief fund
புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை கணக்கெடுத்து நிவாரணம் தர உத்தரவிட்டு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள செய்யூர், மரக்காணம், விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூர், திண்டிவனம் ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு வெள்ளச்சேதம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முதலவர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து உதவிகளை வழங்கியதோடு, வீடுகள் சேதம், கால்நடை இறப்பு, பயிர்ச்சேதம் ஆகியவை கணக்கெடுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கவும் முதலவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிலைமையைச் சீர்செய்ய நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள்; அத்தியாவசியச் சேவைகளை மீட்டெடுத்து வரும் மின்சாரத் துறை பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை, மருத்துவத்துறை, முக்கியமாகப் பேரிடர் தடுப்புப் படைப் பிரிவினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகளையும், நன்றியையும் முதலவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
CM Mk Stalin order for Cyclone relief fund