குவைத் தீ விபத்தில் சிக்கிய தமிழர்கள் - முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு.!
cm mk stalin order medical help to tamilans injured kuwait fire accident
குவைத்தில் தெற்கு பகுதியில் மங்காப்பில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 200 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். அதிலும் குறிப்பாக கேரளா, தமிழ்நாடு போன்ற தென்னிந்தியாவை சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். இந்த நிலையில், இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அதிகாலை நேரம் என்பதால் பலரும் தூக்கத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், புகை மூட்டம் காரணமாக பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும் சுமார் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் பிடித்த தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும், உயிருக்கு போராடியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். இந்த பயங்கர சம்பவத்தில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் ஏராளமானோர் இந்தியர்கள் ஆவர். தமிழர்கள் இருவரும் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் நலத் துறை குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் தமிழ்ச் சங்கங்களைத் தொடர்பு கொண்டு, தீ விபத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்ய முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான தகவல்களுக்கு துறையின் ஹெல்ப்லைன் எண்களான +91 1800 309 3793 (உள்நாட்டு) மற்றும் +91 80 6900 9900, +91 80 6900 9901 (வெளிநாட்டில்) தொடர்பு கொள்ளுமாறும் அந்த வெளியீடு அறிவுறுத்தியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தீ விபத்தில் தமிழர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை கண்டறிந்து அனைத்து உதவிகளையும் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
English Summary
cm mk stalin order medical help to tamilans injured kuwait fire accident