இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த ஓட்டுநர் மலையப்பன் - முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!
CM MK Stalin say about Tirupur driver malaiyappan
பள்ளி வாகனம் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்ட சூழலில் வேனை, சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தி மாணவர்களை காப்பாற்றிய ஓட்டுநர் மலையப்பன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் திருப்பூரில் அரங்கேறியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த ஓட்டுநர் மலையப்பன் என்பவருக்கு, பள்ளி வாகனம் ஓட்டும்போது இன்று மாலை நெஞ்சுவலி வந்துள்ளது.
கடுமையான நெஞ்சு வலியுடன் மாணவர்களின் உயிரை நெஞ்சில் நிறத்தி, வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, வாகனத்தின் இருக்கையில் இருந்தபடியே ஸ்டேரிங்கில் சரிந்து விழுந்துள்ளார் மலையப்பன்.
இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவரை பரிசோதித்த மறுத்தவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
கடுமையான நெஞ்சு வலியுடன் மாணவர்களின் உயிரை காப்பாற்றி விட்டு, ஓட்டுநர் மலையப்பன் உயிரிழந்த சம்பவம் திருப்பூர் பகுதிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இந்த செய்தியினை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து தெரிவித்துள்ளதாவது,
இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த திரு. மலையப்பன் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார்" என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவருக்கு புகழஞ்சலி செலுத்துள்ளார்.
English Summary
CM MK Stalin say about Tirupur driver malaiyappan