தமிழ்நாடு அரசு புறக்கணிக்கிறது - பிரதமர் மோடிக்கு அதிர்ச்சி கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
CM MK Stalin Say About Union Budget 2024
மூன்றாவது முறையாக வாக்களித்த மக்களுக்கு பாஜக அரசு எதையும் செய்யவில்லை என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாவது, "தமிழ்நாடு என்ற சொல்லே, மத்திய அரசு பட்ஜெட்டில் இல்லை என்று சொல்வதை விட, மத்திய அரசின் சிந்தனை மற்றும் செயல்களில் தமிழ்நாடே இல்லை.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு புறக்கணிக்கிறது. மைனாரிட்டி பாஜகவை, மெஜாரிட்டி பாஜகவாக உருவாக்கிய சில மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு திட்டங்களை பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளத" என்று தெரிவித்தார்.
முன்னதாக மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில், "இந்த ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாகத் தெரியவில்லை.
மாறாக, அரசியல் காரணங்களுக்காக பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களை ஆளுவோருடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தம் போன்றே உள்ளது.
அரசியல் சுயலாபங்களுக்காக குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், மதவாத அரசியலை தொடர்ந்து புறக்கணிக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தைக் கக்கிடும் வகையில் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
English Summary
CM MK Stalin Say About Union Budget 2024