உங்களுக்காக களத்தில் இருக்கும் ஆட்சிதான் இது... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
CM mk Stalin speech
தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் சேர்ந்த 15000 பேருக்கு நலத்திட்ட உதவிகள், விளைநிலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வீடுகள் இழந்தவர்களுக்கு, படகுகள் செய்த வடைந்த மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு, தி.மு.க எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியிருப்பதாவது,
தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கர்ஜனை மொழியாக செயல்படுகிறார் கனிமொழி எம்.பி.

கனிமொழியைப் போலவே கீதா ஜீவனும் சிறப்பாக செயல்படுகிறார். மழை வெள்ளத்தின் போது திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் இங்கே இருந்தார். உடைந்த பாலங்கள் அனைத்தும் சரி செய்த பிறகு அமைச்சர் எ.வ. வேலு சென்னைக்கு திரும்பினார்.
தென் மாவட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பெரிய நிறுவனங்களை கொண்டு வருகிறோம். இன்று கூட கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினோம். கொரோனா பாதிப்பின் போது ரூ. 4000 நிவாரணம் வழங்கப்பட்டது.
வெள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ. 6000 நிவாரண உதவி வழங்கப்பட்டது. பாதிக்கப்படும்போது மட்டுமில்லாமல் இறுதிவரை துணையாக நிற்போம். இரண்டு பெரிய பேரிடர்களுக்காக ரூ. 37 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் கேட்டோம்.
சாதுரியம் இருந்தால் நீங்களே சமாளிக்க வேண்டியது தானே என தெரிவித்தார்கள். உங்களுக்காக களத்தில் இறங்கும் ஆட்சிதான் தி.மு.க என தெரிவித்துள்ளார்.