ஓமனில் கடத்தப்பட்ட தமிழக மீனவரை மீட்க தமிழக முதல்வர் கடிதம்.!
cm mk stalin wrote letter for rescue tamilnadu fisherman in oman
ஓமன் துறைமுகத்தில் பதினெட்டு தமிழக மீனவர்கள் மீன்பிடி படகுகளில் பணிபுரிந்து வந்தனர். அவர்களில் பெத்தாலிஸ் என்ற மீனவரை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "ஓமன் நாட்டின் துறைமுகத்தில் மீன்பிடிப் படகுகளில் பணிபுரிந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 18 மீனவர்களின் ஊதியத்தை உரிமையாளர் தராததால் உரிமையாளருக்கும் மீனவர்களுக்கும் இடையே பிரச்சனை நிலவி வந்தது.
இந்த நிலையில், தமிழக மீனவர்களின் குழுவில் பெத்தாலிஸ் என்பவரை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பெத்தாலிஸை உடனடியாகக் கண்டுபிடித்து, இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவரது மனைவி ஷோபா ராணி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஓமன் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம் பெத்தாலிஸை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று கடிதத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
cm mk stalin wrote letter for rescue tamilnadu fisherman in oman