#BREAKING: காவிரியில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் பள்ளி மாணவிகள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 4 மாணவிகள் திருச்சியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக சென்ற பொழுது மாயனூர் கதவனை அருகே உள்ள காவிரி ஆற்றில் இறங்கியுள்ளனர்.

காவிரி ஆற்றில் சுழல் உள்ளதை அறியாமல் ஒரு மாணவி இறங்கிய போது ஒரு மாணவி நீரில் மூழ்கியுள்ளார். அப்பொழுது அந்த மாணவியை காப்பாற்ற முயன்ற பொழுது மற்ற மூன்று மாணவிகளும் சுழலில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

இந்த நிலையில் ஆற்றில் மூழ்கிய நான்கு மாணவிகளையும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சடலமாக மீட்டு உள்ளனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நான்கு மாணவிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கால்பந்து விளையாட்டில் கலந்து கொண்ட பின்னர் இன்று காலை கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மாயனூர் கிராமத்தில் செல்லாண்டியம்மன் கோவில் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

அப்பொழுது சோபியா, தமிழரசி, இனியா, மற்றும் லாவண்யா ஆகிய நான்கு மாணவிகள் எதிர்பாராத விதமாக சுழலில் சிக்கி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி மிகுந்த வேதனை அடைந்தேன்.

உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cm mkstalin announced Relief fund Rs2 lakh to 4 girl students died


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->