ஹேப்பி நியூஸ்.!! மகளிர்க்கான ரூ.1000 யாருக்கு.? முதல்வர் நாளை ஆட்சியர்களுடன் ஆலோசனை.!! - Seithipunal
Seithipunal


திமுக கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் சட்டமன்ற மானிய கோரிக்கையின் பொழுது முன்னாள் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்து மகளிர்க்கும் உரிமை தொகையான தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு தற்பொழுது தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே அறிவிப்பது ஏமாற்றும் வேலை என கடுமையாக விமர்சனம் செய்து இருந்தன.

மேலும் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை எனவும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தன. இந்த நிலையில் கடந்த மே 25ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல் மு க ஸ்டாலின் தலைமையில் மகளிர் காண உரிமை தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்தத.

ஏற்கனவே முதல் மு க ஸ்டாலின் செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முதல் குடும்பத்தலைவிகளுகாகு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். மேலும் பாடநூல் கழக இயக்குனராக இருந்த இளம்பகவத் ஐஏஎஸ் மகளிர் உரிமைத் தொகை திட்ட சிறப்பு ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். நாளை பிற்பகல் 3 மணி அளவில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாய்களாக முதல் மு க ஸ்டாலின் மற்றும் மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு அதிகாரி இளம்பகவத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cm MKStalin discussing about 1000 rupees entitlement with collectors


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->