#சேலம் :: பட்டாசு கிடங்கில் பயங்கர வெடிவிபத்து.! 3 பேர் பலி.! முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
CM relief announced for 3 killed in explosion in firecrackers warehouse in salem
சேலம் மாவட்டத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவத்தில் சிக்கி பெண் உட்பட 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சேலம் மாவட்டம், சேலம் வட்டம், எஸ்.கொல்லப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசுக் கிடங்கில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சேலம் எம்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த த/பெ.சென்றாயன் (வயது 50), திரு. சதீஷ்குமார், த/பெ.கந்தசாமி (வயது 35) மற்றும் அடையாளம் தெரியாத ஒரு பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் காயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேலம் எம்.கொல்லப்பட்டியை சேர்ந்த வசந்தா (45), மோகனா (38), மணிமேகலா (36), மகேஸ்வரி (32), பிரபாகரன் (31) மற்றும் பிருந்தா (28) ஆகிய 6 பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 6 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டு உள்ளேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
CM relief announced for 3 killed in explosion in firecrackers warehouse in salem