விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு நிதியுதவி! முதல்வர் உத்தரவு! - Seithipunal
Seithipunal


திருவான்மியூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே சிவகாமி என்ற தூய்மை பணியாளர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கார் அவர் மீது மோதியது. 

இந்த விபத்தில் தூய்மை பணியாளர் சிவகாமி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து அவர் மீது சரக்கு லாரி ஒன்று ஏறி இறங்கியது. இதில் சிவகாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இதனை அடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்த தூய்மை பணியாளர் சிவகாமியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். 

பின்னர் சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். 

இது விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்த சி.சி.டிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin announce financial assistance sanitation worker family


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->