"இனி வெளிநாட்டிற்கு உயர்கல்வி பயிலச் சென்றால்..!!" - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் முழு கல்விச் செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்விக்காக சர்வதேச, தேசிய மற்றும் தமிழக அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்களுக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. 

இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள், மடிக்கணினிகள் ஆகியவற்றை வழங்கி தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, "திமுக ஆட்சியில் கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை பல்வேறு சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. 

புதுமைப் பெண் திட்டம் மூலம் உயர் கல்வியில் சேரும் மாணவிகளின் சராசரி 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தேசிய அளவில் தமிழகம் தான் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கையில் முன்னிலையில் உள்ளது. அரசுப் பள்ளிகளில் காலத்திற்கேற்ப பல்வேறு வசதிகள் செய்யப் பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வது மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வரும். 

வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு அவர்களது முழு கல்விச் செலவையும், பயணச் செலவையும் அரசே ஏற்றுக் கொள்ளும். அதே போல் தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் வாய்ப்பு பெற்ற மாணவர்களின் கல்விச் செலவையும் அரசே ஏற்கும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திமுக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin Announces Benefits For Goverment School Students Who is Going To Study in Abroad


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->