மார்ச் 3ல் முக்கிய ஆலோசனை... ஈபிஎஸ்.,க்கும் அழைப்பு... முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம்..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஆர்.ராஜகோபால்  இருந்த நிலையில் செல்வராஜ், தமிழ்ச்செல்வன், பிரதாப் குமார், முத்துராஜ், தனசேகரன், ஸ்ரீதர் ஆகியோர் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் அனைவரும் பதவியில் இருந்து விலகினர்.

காலியாக உள்ள பணியிடங்களுக்கு புதிய ஆணையர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. தகவல் ஆணையர்கள் பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதி வாய்ந்த நபர்களின் பட்டியலை தயார் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவானது தகவல் ஆணையர் பரிந்துரை பட்டியலை முதல்வர் மு.க ஸ்டாலினிடம் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் வரும் மார்ச் 3ம் தேதி தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடு​த்துள்ளார். தகவல் ஆணையர் நியமன பதவியில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமியும் தனது கருத்துக்களை முன் வைக்க உள்ளார். 

முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வு செய்யப்படும் தகவல் ஆணையர்களின் பெயர்களை ஆளுநரின் ஒப்புதல் பெற்ற பின் அரசிதழில் வெளியிடப்படும். தற்போதைய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்புவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு அவரும் விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin arranged consultation meeting appointment of Information Commissioner


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->