மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் காலமானார்.! முதலமைச்சர் இரங்கல்..!
Cm stalin condolence for Madurai Meenakshi Amman Temple Thakkar Karumuthu Kannan passed away
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் இன்று காலமானார்(70). மதுரையில் பிரபலமான தியாகராஜர் கல்லூரி, தியாகராஜர் மில்ஸ் மற்றும் பல நிறுவனங்கள் நடத்தி வந்த இவர், 18ஆண்டுகளாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த கருமுத்து கண்ணன் இன்று காலமானார்.
இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் தக்கார் திரு. கருமுத்து கண்ணன் அவர்கள் மறைந்த செய்தியால் அதி்ர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் தொழில்துறை, கல்வித்துறை, கோயில் திருப்பணிகள் என அனைத்திலும் சிறந்து விளங்கி, பலருக்கும் உதவிகள் செய்த உயர்ந்த உள்ளம் கொண்ட கருமுத்து கண்ணன் மறைவு பேரிழப்பு. அவரது மறைவினால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Cm stalin condolence for Madurai Meenakshi Amman Temple Thakkar Karumuthu Kannan passed away