தலைமைச் செயலகத்தில் குவிய போகும் காவல்துறை அதிகாரிகள்... மு.க ஸ்டாலின் தலைமையில் திடீர் ஆலோசனை...!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு குறித்து இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி கட்டிலில் அமர்ந்த பிறகு சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை முறியடிக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முதல்வர் மு.க ஸ்டாலின் எடுத்து வருகிறார். 

தமிழகத்தில் உள்ள சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் அப்பொழுது முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று காலை 11:30 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். 

அதேபோன்று அனைத்து மாவட்ட எஸ்பிகளும் காணொளி மூலம் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு நிலவரம் மற்றும் அதற்காக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் முதல்வர் மு.க ஸ்டாலினிடம் விளக்கம் அளிக்க உள்ளனர். மேலும் தமிழகத்தில் நிலவும் போதைப்பொருள் புழக்கம், கொலை, கொள்ளை, பலாத்காரம், இணைய குற்றம் போன்ற சம்பவங்களை தடுப்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin consult with police officials law and order in TamilNadu


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->