அண்ணா பிறந்த ஊரில் இருந்து.. மகளிர் உரிமைத் தொகை.. வெளியான அதிகாரப்பூர்வ தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்தத் திட்டம் மூலம் பயன்பெற தகுதியான குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுக்கும் பணி தமிழக முழுவதும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நியாய விலை கடை ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் தமிழக முழுவதும் சுமார் 3,000 மேற்பட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியான குடும்பத்தலைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது வரை முதற்கட்டமாக தமிழக முழுவதும் 50 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே போன்று இரண்டாம் கட்டமாக விண்ணப்ப வினியோகம் நேற்று தொடங்கியது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை ஒட்டி இந்த திட்டம் தொடங்கப்படுவதால் அவர் பிறந்த காஞ்சிபுரத்திலேயே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்ததை தொடங்கி வைப்பதற்கான ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin launches magalir urimai thogai scheme in kanchipuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->