முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்! டெல்லியில் அமைச்சர் துரைமுருகன்! - Seithipunal
Seithipunal


கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி நீரினை தமிழ் நாட்டிற்கு அளித்திட, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகள் வழங்கக் கோரி, மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தை, தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களை நேரில் சந்தித்து கடிதத்தை அளித்து, கர்நாடக அரசு இதுவரை தமிழ்நாட்டிற்கு அளிக்கவேண்டிய காவிரி நீரை அளிக்காததால் தமிழ்நாட்டில் நிலவும் நீர்ப் பற்றாக்குறை பற்றி எடுத்துரைத்தார்.

மேலும், இத்தகைய கடினமான சூழலில், குறுவை பயிரினை காக்க, கர்நாடக அரசு உடனடியாக காவிரி நீரை திறந்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

இப்பிரச்சனையில் தலையிட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி மாத வாரியாக நிர்ணயிக்கப்பட்ட நீரினை வழங்குமாறும், நீர்குறைப்பாட்டை ஈடு செய்யுமாறும். கர்நாடகாவிற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட தேவையான அறிவுரைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்குமாறும் அமைச்சர் துரைமுருகன் கேட்டுக்கொண்டார்.

அதற்கு, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர், கர்நாடக அரசு காவிரியில் தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கும் மற்றும் நீர் பற்றாக்குறை காலங்களில் சரியான நீர் பங்கீடு செய்வதற்கு தேவையான முறையை செயல்படுத்துவதற்கும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகளை வழங்குவதாக உறுதியளித்து உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin letter to Central Minister For Cauvery issue july 2023


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->