குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்! ஆளுநர் குறித்து 15 பக்க ரிப்போர்ட்!  - Seithipunal
Seithipunal


ஆளுநர் விவகாரம் குறித்து, குடியரசுத் தலைவருக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 15 பக்க புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், ஆளுநர் ரவிக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்ளும் இருவரும், சிரித்து கைகுலுக்கி பேசினாலும், மற்ற விவகங்களில் சமரசம் செய்து கொள்ளாமல் முரண்பாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர்.

மேலும், ஆளுநர் அவர்களின் பேச்சு பேச்சுக்கு ஆளுகின்ற தமிழக அரசு சார்பிலும், திமுக தரப்பிலும் அவ்வப்போது எதிர்ப்பு தெரிவித்து வருவதும் நிகழ்ந்து வருகிறது.

உச்சபட்சமாக செந்தில்பாலாஜி கைது விவகாரத்தில் ஆளுநர் VS முதல்வர் என்ற நேரடி அதிகார மோதல் நடந்த நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

ஆளுநர் விவகாரம் குறித்து சுமார் 15 பக்க அளவில் தனது கடிதத்தில் விரிவாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குறிப்பாக செந்தில் பாலாஜி விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

நேற்றைய தினம் தலைநகர் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக ஆளுநர் ரவி சந்தித்து, சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் பேசிய நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin Letter to President Murmu For Governor RNRavi issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->