பணிக்காலத்தில் இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
CM Stalin order to died during service employees government job
பணிக்காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை அளிப்பதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு இறந்த பணியாளர்களின் 61 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இன்று அரசுவேலை வழங்கப்பட்டது.
பணிக்காலத்தில் உயிரிழந்த பள்ளிக்கல்வித் துறை ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப வேலைகள் அளிப்பதற்காக பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு இருந்தது.
இதன் அடிப்படையில் பணிக்காலத்தில் மரணம் அடைந்த பணியாளர்களின் 61 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இன்று அரசுவேலை அளிக்கப்பட்டது.
இதன் அடையாளமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்துக்கு 4 பேரை வரவழைத்து அவர்களிடம் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்ப, உயர்நிலை, மேல்நிலைபள்ளிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அலுவலகங்களில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட்போர்டு உள்ளிட்ட ரூ.6.86 கோடி செலவில் செய்து தரப்பட்டுள்ள 303 திறன் வகுப்புகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
English Summary
CM Stalin order to died during service employees government job