மாநில அரசால் கச்சதீவுவை தாரைவார்க்க முடியுமா? அறிவில்லாம பேசுறாங்க - முக ஸ்டாலின்!  - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரத்தில் இன்று நடைபெற்று வரும் மீனவர்கள் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம்.

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் மீனவர் குடும்ப மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 5%-ல் இருந்து 20%-ஆக உயர்த்தியுள்ளோம்.

கடல் அரிப்பை தடுக்க, படகுகளை பாதுகாக்க தூண்டில் வளைவுகள் அமைத்துக் கொடுத்துள்ளோம்.

ஆண்டுக்கு விசைப்படகுக்கு டீசல் 18,000 லிட்டர், நாட்டுப்படகுகளுக்கு 4,000 லிட்டர் விற்பனை வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

குடிமைப்பணி தேர்வுக்காக மீனவ சமுதாய மாணவர்களுக்கு 6 மாத சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாநில அரசால் இந்தியாவின் ஒரு பகுதியை தாரை வார்க்கமுடியுமா? கச்சதீவு விவகாரத்தில் அறிவில்லாமல் பேசுகிறார்கள்.

மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றவில்லை.

கச்சதீவு விவகாரத்தில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்தது அதிமுக மட்டும் தான். மீனவர்களுக்கு துரோகம் செய்வதையே அதிமுக நோக்கமாக கொண்டுள்ளது" என்று முக ஸ்டாலின் பேசினார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin say about Katchatheevu issue aug 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->