செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா! ஜெயலலிதா பாணியில், ஸ்டாலின் உரை!
CM Stalin speech in JJ Model
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், காவல்துறை சார்பில் நடைபெற்ற "சிற்பி" நிறைவு விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசியதாவது, "இங்கே வந்திருக்கின்ற மாணவ செல்வங்களிடம் நான் வைக்கின்ற வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். பள்ளியோடு கல்வியை நிறுத்திடாமல் எல்லோரும் கல்லூரிகளுக்கு போகவேண்டும்.
நீங்கக் எதை பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள்! நன்றாக விளையாடி உடலை உறுதி செய்யுங்கள்! சமூகத்தைப் படியுங்கள்! அந்தக் கல்வியின் மூலமாக பகுத்தறிவையும், சுயமரியாதையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்! அறிவியல் மனப்பான்மைய வளர்த்துக் கொள்ளுங்கள்! அந்தப் படிப்பை வைத்து சிந்தியுங்கள்! புதிய புதிய கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்துங்கள்! படிப்பு மட்டும்தான் உங்களிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாத சொத்து!
உங்களுடைய படிப்பையும் திறமையும் பார்த்து, பெரிய பெரிய கம்பெனிகள் உங்களை அழைத்து வேலை கொடுக்க வேண்டும். நீங்களும் தொழில் தொடங்கி, நிறைய பேருக்கு வேலை கொடுக்க வேண்டும்.
உங்களோட மற்ற கவலைகளை போக்குவதற்கு மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினான நான் இருக்கேன்! நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது. படிக்கின்ற காலத்தில் உங்களுக்கு வேறு எதிலும் கவனச் சிதறல்கள் இருக்கக் கூடாது.
இன்றைக்கு போதை ஒழிப்பு நாள்! அதனால் கேட்டுக்கொள்ள விரும்புவது, எந்தவிதமான போதைப் பழக்கத்திற்கும் நீங்களும் அடிமையாகக் கூடாது. உங்கள் நண்பர்களையும் அடிமையாக விடாதீர்கள்.
இன்றைக்கு உலக போதை ஒழிப்பு நாள்! உங்களை சுத்தியிருகிறவர்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டியது. "போதை என்பது உங்கள் உடலுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல. நாட்டிற்கும். எதிர்காலத்திற்கும் அது மிக. மிக கேடு! அதனை புறந்தள்ளி போதையற்ற சமுதாயத்தை உருவாக்கவேண்டும்."
இதைத்தான் நீங்கள் எல்லோருக்கும் சொல்லவேண்டும்.
சொல்லுவீர்களா...
சொல்லுங்க சொல்லுவீர்களா... எல்லோருக்கும்? (செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில், முதல்வர் ஸ்டாலின் மாணவர்களை பார்த்து உரக்க கேட்டார்)
அன்புச் செல்வங்களே, அன்பு மாணவ கண்மணிகளே, நீங்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக, நம்பிக்கைக் கொண்டவர்களாக, நீதியில், நேர்மையில் உறுதிகொண்டவர்களாக திகழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்! ஆல் தி வெரி பெஸ்ட்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
English Summary
CM Stalin speech in JJ Model