முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் மாநாடு தொடக்கம்! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், இன்று பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், இன்று உயா்கல்வியின் வளா்ச்சி தொடா்பாக மாநாடு நடைபெற துவங்கி உள்ளது. இந்த மாநாட்டுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தா்கள் கலந்து கொண்டனர். 

இதற்கு முன்னதாக இந்த மாநாடு ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணத்தையொட்டி இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த மாநாட்டில், மாநில கல்விக்கொள்கையை உருவாக்குவது, உயர்கல்வியில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது மற்றும் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது போன்றவை குறித்து இந்த மாநாட்டில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

மேலும், இந்த மாநாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் பல்வேறு புதிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin vice chancellor meet today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->