கள்ளக்குறிச்சி பலி எண்ணிக்கை 13! வழக்கை உடனடியாக சிபிசிஐடி வசம் ஒப்படைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பான வழக்கை உடனடியாக சிபிசிஐடி வசம் ஒப்படைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் அருகே கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது.

கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு 50க்கும் அதிகமானோர் புதுவை, சேலம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.

குறிப்பாக உயர் சிகிச்சைக்காக 14 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இதற்கிடையே கள்ளச்சாராயம் விற்றதாக கண்ணுக்குட்டி என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவண் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை உடனடியாக சிபிசிஐடி வசம் ஒப்படைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CMO TamilNadu Kallakurichi Case CBCID 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->