மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர்.! - Seithipunal
Seithipunal


திருவாரூர், திருராமேஸ்வரம் பகுதியில் உள்ள கோவில் திருவிழாவிற்கு கடந்த 29ஆம் தேதி அன்று விளம்பர பதாகைகளை வைப்பதற்காக அதை கிராமத்தைச் சேர்ந்த மதன்ராஜ் (வயது 15) என்பவர் பதாகைகளை மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்ற போது எதிர்பாராத விதமாக மின் மாற்றியில் உராய்வு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். 

இவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் ஒரு சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் காயமடைந்து  மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரூபன் (வயது 19) என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். 

இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ. 2 லட்சமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் பெற்றோருக்கு ரூ. 50,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CN announced relief family boy died electric shock


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->