என்னங்கடா இது கரப்பான் பூச்சி எல்லாம் செத்து கிடக்கு....!!! ஹோட்டல் உணவில் கிடந்த கரப்பான் பூச்சி...!
Cockroaches found hotel beef food customer complaint
கன்னியாகுமரியில் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோடு பகுதியில் ஒரு பிரபலமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு நேற்று காலை, மார்த்தாண்டம் அருகேயுள்ள கண்ணக்கோட்டையை சேர்ந்த ஒருவர் சாப்பிடச் சென்றார்.

அங்கு பசியுடன் வந்த அவர் 'பீப் இறைச்சி' உணவை வாங்கி சாப்பிட தொடங்கினார்.அப்போது அதில் 'கரப்பான் பூச்சி' கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர், அங்கு ஓட்டல் நிர்வாகத்திடம் காட்டி தெரிவித்தார்.
ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்தனர். பின்னர் அவர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு இந்தத் தகவலை ஆதாரத்துடன் காண்பித்ததுடன் புகார் கொடுத்தனர்.
இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் ஓட்டலில் சோதனை நடத்தினர். அப்போது ஓட்டல் சமையல் அறை மிகவும் சுகாதரமற்ற நிலையில் இருந்தது.
மேலும், காலாவதியான உணவு பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து சுகாதாரமற்ற முறையில் உணவு செயல்பட்ட அந்த ஓட்டலுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
மேலும், ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.10000 அபராதமும் விதிக்கப்பட்டது.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Cockroaches found hotel beef food customer complaint