கோவை காமாட்சிபுரி ஆதீனம் மறைவு! பொதுமக்கள் கண்ணீர்மல்க அஞ்சலி.!
Coimbatore Kamachipuri Atheenam dead
கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்து விட்டார்.
இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் இருந்து தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு நாளை ஆதீனம் ஞானகுரு உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் உள்ளூர் மக்கள் தற்போது சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
English Summary
Coimbatore Kamachipuri Atheenam dead