கூடைப்பந்து போட்டியில் விளையாடி பதக்கத்துடன் சென்னை திரும்பிய மாணவி உயிரிழப்பு - காரணம் என்ன?
coimbatore player died after playing returned to chennai
கோயம்புத்தூர் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவி எலினா லாரெட் கூடைப்பந்து விளையாடுவதில் வல்லவர். இவர் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் பங்கேற்றுவிட்டு ரயில் மூலம் கடந்த 15 ஆம் தேதி சென்னை திரும்பினார்.
ரயிலில் வந்த மாணவிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் உடல் நலம் மோசமானதால் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பெரியமேடு அரசு மருத்துவமனைக்கு ஏற்றி சென்றனர். ஆனால் மாணவி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவி உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தியதில், மாணவி ரயிலில் சென்னை வரும் போது அவர் பர்கர், சிக்கன் ரைஸ், பீட்சா உள்ளிட்டவைகளை ஆன்லைனில் ஆர்டர் போட்டு சாப்பிட்டுள்ளார்.
இதனால், மாணவி எலினாவுக்கு வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. உடனே மாணவி கோவைக்கு செல்லாமல் சென்னையில் உள்ள உறவினர்களிடம் சொல்லி மருத்துவமனைக்கு சென்ற போது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
ஆகவே அவரது உடல் உபாதைக்கு அவர் ஆர்டர் செய்த உணவுதான் காரணம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இருப்பினும் உறுதியான காரணங்கள் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரிய வரும். விளையாட்டு போட்டிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
coimbatore player died after playing returned to chennai