கோவை | அதிரடியாக குறைந்த மீன்களின் விலை! மார்க்கெட்டில் அலைமோதும் மக்கள் கூட்டம்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர், உக்கடம் பகுதியில் ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் செயல்படுகிறது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு இராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் கடல் மீன்கள் விற்பனை செய்யப்படுவதற்காக வருகிறது. 

அவ்வாறு வருகின்ற மீன்களை கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் மார்க்கெட்க்கு வந்து வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மார்க்கெட்டில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. 

மேலும் அவர்கள் மார்க்கெட்டில் தங்களுக்கு பிடித்தமான மீன்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் இன்று மீன்களின் விலை சற்று குறைந்துள்ளதால் மீன் பிரியர்கள் அதிக அளவிலான மீன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதன்படி மத்தி மீன் ஒரு கிலோ ரூ. 150 க்கும், சங்கரா மீன் ரூ. 250க்கும், வஞ்சரம் ரூ. 500க்கும், செமின் ரூ. 300க்கும், அயிலை மீன் ரூ. 150 க்கும், நண்டு ரூ. 200க்கும், ஊலி மீன் ரூ. 300க்கும், நெத்திலி மீன் ரூ. 300க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த மாதத்தை விட மீன்களின் விலை கிலோவிற்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை குறைந்து விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore ukkadam fish price low 


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->