கனிமொழி எம்.பி பயணித்த போது டிக்கெட் எடுப்பதில் தகராறு.. பெண் ஓட்டுநரின் வேலை பறித்த உரிமையாளர்.!! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த ஷர்மிளா தான் கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநர். இவர் கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் செல்லக்கூடிய தனியார் பேருந்தை இயக்கி வருகிறார். இவரை அரசியல் கட்சி தலைவர்கள், மக்கள், சக ஓட்டுநனர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஷர்மிளா இயக்கி வரும் தனியார் பேருந்தில் திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்பியுமான கனிமொழி இன்று பயணம் செய்தார். அப்போது அவர் சர்மிளாவை "பேருந்தை சூப்பராக ஓட்டுறீங்க" என வாழ்த்தியதோடு அவருக்கு கை கடிகாரம் பரிசாக வழங்கி உற்சாகப்படுத்தினார். திமுக கனிமொழி எம்.பி பயணம் செய்வதை அறிந்த திமுகவினர் அந்த பேருந்தில் பயணிக்க ஆர்வம் காட்டினர்.

இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி பயணம் செய்த போது நடத்துனருக்கும் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கும் இடையே பயணச்சீட்டு எடுப்பதில் வாக்குவாதம் உருவாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊழியர்கள் பேருந்து உரிமையாளரிடம் புகார் அளித்ததை அடுத்து விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் பெண் ஓட்டுனரான ஷர்மிளாவை பணியில் இருந்து நீக்குவதாகவும் பேருந்து உரிமையாளர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore woman driver lost her job


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->