#வேலூர் || அணைக்கட்டு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்! மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டு, ஆலங்காயம், ஒடுகத்தூர், ஏலகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை வரை இந்த மலைத்தொடரானது அமைந்துள்ளது. இந்த கிழக்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே கிழக்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஊனை மோட்டர் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார். 

சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வேலூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் திருப்பதி மலைப்பகுதியில் கோவிலுக்குச் சென்ற சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்த நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்திலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Collector advises not to go out at night leopards in Vellore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->