ஆசைவார்த்தைக் கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்தகாரம் செய்த கல்லூரி மாணவர் கைது.!
college student arrested for sexuall harassment case
நாமக்கல்லில் கல்லூரி மாணவியைக் காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கி விட்டு திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்த மாணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் பகுதியைச் சேர்ந்தவர் குப்பாபுலி. இவருடைய மகன் வாசுராஜா. இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் இறுதி ஆண்டு பயின்று வருகிறார். இவர் அதே கல்லூரியில் பயிலும் திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
அப்போது இருவரும் தங்களது காதலை வளர்ப்பதற்காக அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் வாசுராஜா, அந்த மனைவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதில் அந்த மாணவி எதிர்பாராதவிதமாக கர்ப்பம் ஆனார். இதனை அந்த மாணவி வாசுராஜாவிடம் தெரிவித்தும் உள்ளார். ஆனால், அவர் தெரிவித்தது போல் அந்த மாணவியைத் திருமணம் செய்யவில்லை.
நாளடைவில், வாசுராஜா தன் காதலியை தனிமையில் சந்திப்பதையும், அவருடன் பேசுவதையும் தவிர்த்தார். இது தொடர்பாக அந்த மாணவி, சாணர்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் வாசுராஜாவைக் கைது செய்தனர். கல்லூரி மாணவியை காதலிப்பதாக கூறி சகமாணவர் கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
college student arrested for sexuall harassment case