ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவருக்கு சேற்றில் காத்திருந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவருக்கு சேற்றில் காத்திருந்த அதிர்ச்சி.!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் அடுத்த செக்கஞ்சேரியை சேர்ந்தவர் விஷ்ணுகுமார். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், விஷ்ணுகுமார் நேற்று பிற்பகல் தமது நண்பர்களுடன் அருகிலுள்ள கொசத்தலை ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றுள்ளார்.

அங்கு அனைவரும் குளித்துக்கொண்டிருக்கும் போது விஷ்ணுகுமார் திடீரென சேற்றில் சிக்கி அலறி துடித்து மாயமானார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விஷ்ணுகுமாரின் நண்பர்கள் ஆற்றில் மாயமான அவரைத் தேடியுள்ளனர்.

சிறிது நேரம் தேடி விஷ்ணுகுமாரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதன் பின்னர் அவர்கள் விஷ்ணுகுமாரை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து மாணவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்கச் செட்னரா கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student died drowned kosasthalai river


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->