திருநெல்வேலி - தடை செய்யப்பட்ட அருவியில் புகைப்படம் எடுத்த மாணவன் திடீர் மாயம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி - தடை செய்யப்பட்ட அருவியில் புகைப்படம் எடுத்த மாணவன் திடீர் மாயம் - நடந்தது என்ன?

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அசுரான் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்காதர். இவருடைய மகன் பெரோஸ்கான். இவர் நெல்லையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், பெரோஸ்கான் நேற்று மாலை தனது நண்பர்கள் பத்துக்கு மேற்பட்டோருடன் அகஸ்தியர் அருவிக்கு குளிக்கச் சென்றார். அங்கு ஒற்றை அருவி என்ற பகுதி வனத்துறையால் தடை செய்யப்பட்ட பகுதியாகும். 

ஆனால், பெரோஸ்கான் தடைசெய்யப்பட்ட பகுதி என்றும் பாராமல் அங்கு தன் நண்பர்களுடன் குளிக்கவும், செல்ஃபி எடுக்கவும் செய்தார். அப்போது, பெரோஸ்கான் மட்டும் திடீர் என்று மாயமானார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அங்கு வழக்கமான ரோந்துப் பணிக்கு வந்த வனத்துறையினரிடம் பெரோஸ்கான் மாயமாகி விட்டதாக தெரிவித்தனர்.

உடனே வனத்துறையினர் தீயணைப்புப் படை வீரர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர தேடுதலுக்குப் பின்பு பெரோஸ்கான் உடலை மீட்டனர். 

இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பெரோஸ்கான் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student drowned waterfall in tirunelveli


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->